search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக எம்பிக்கள்"

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 3-ந்தேதி கருணாநிதி பிறந்தநாள் விழா, புதிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடக்கிறது.
    சென்னை:

    கருணாநிதி பிறந்தநாள் விழா வருகிற 3-ந்தேதி பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் கருணாநிதி பிறந்தநாள் விழா, புதிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடக்கிறது.

    இதற்கான மேடை அமைப்பு உள்ளிட்ட பணிகளை தென்சென்னை மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள்.

    இந்த விழாவுக்காக 120 அடியில் பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது. அதை 3 மேடைகளாக வடிவமைக்கிறார்கள். நடுமேடையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அமர்வார்கள்.

    இன்னொரு மேடையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 38 எம்.பி.க்கள் அமர்வார்கள். மற்றொரு மேடையில் புதிதாக வெற்றிபெற்ற தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள்.

    மேடையின் முன்பு 100 அடி உயரத்தில் தி.மு.க. கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. அதேபோல் 100 அடி உயரத்தில் தி.மு.க. தலைவரின் வண்ண மின்விளக்கு கட்-அவுட் அமைக்கப்படுகிறது.

    மேலும் 70 அடி உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட தி.மு.க. கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் பகுதியில் உதயசூரியன் வடிவ ஒளி விளக்குகள் அமைக்கப்படுகிறது.

    இதேபோல் மேடை அருகில் 70 அடி உயரத்தில் 12 கூட்டணி கட்சிகளின் கொடிக்கம்பங்களும் இடம் பெறுகிறது. இந்த கம்பங்களில் ஏற்றுவதற்கான அனைத்து கட்சிகளின் கொடிகளும் பூனாவில் தயாராகி வருகிறது.

    சைதாப்பேட்டையில் கலைஞர் பொன்விழா வளைவு உள்ளது. 45 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த வளைவையும் கருணாநிதி பிறந்தநாளையொட்டி புதுப்பிக்கின்றனர். அந்த பணிகளை மாவட்ட செயலாளரும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். அவருடன் பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    மு.க.ஸ்டாலினுக்கு இதுவரை முறையான அழைப்பு வராததால் மோடி பதவி ஏற்பு விழாவை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க உள்ளனர்.
    சென்னை:

    நரேந்திர மோடி இன்று 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகையில் செய்யப்பட்டு வருகிறது.

    விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் இவ்விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் 20 பேருக்கும் அழைப்பிதழ் வந்துள்ளது.


    ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இதுவரை முறையான அழைப்பு வரவில்லை. எனவே மோடி பதவி ஏற்பு விழாவை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 20 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 3 பேர் என தி.மு.க. வுக்கு மொத்தம் 23 எம்.பி.க்கள் உள்ளனர்.

    இதன் மூலம் பா.ஜனதா, காங்கிரசை அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. விளங்குகிறது. ஆனாலும் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்காதது தி.மு.க. தலைவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தால் மட்டும் தான் நாங்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்போம் என தி.மு.க. செய்தி தொடர்பாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

    மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் பிரசாரத்தின்போது மோடியை கடுமையாக தாக்கி பேசி இருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து பேசினார். என்றாலும் ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்றபோது மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது என தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

    பா.ஜனதா நிர்வாகிகள் கூறும்போது, மு.க.ஸ்டாலினின் மோடிக்கு எதிரான பிரசாரத்தால் எங்கள் மேலிடம் வருத்தம் அடைந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கள் எங்கள் கட்சியை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

    எங்களுக்கு எதிரான விமர்சனங்களுக்கு சமூக வலைதளங்களில் சரியான பதிலடி கொடுக்க தயாராகி வருகிறோம். மு.க.ஸ்டாலின் தான் எங்களுக்கு முதல் எதிரி என்றனர்.
    முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவுக்கு பாராளுமன்ற திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் பதவி வழங்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 37 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார், ம.தி.மு.க.வை சேர்ந்த கணேசமூர்த்தி, ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் கட்சியை சேர்ந்த சின்ராஜ் ஆகிய 4 பேர் உள்பட மொத்தம் 23 பேர் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

    இதன் மூலம், பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக தி.மு.க இடம் பிடித்துள்ளது. காங்கிரசுக்கு அடுத்த இடத்தில் தி.மு.க. இருப்பதால் பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் முக்கியத்துவம் கிடைக்கும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் தி.மு.க. சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். கூட்டத்தில் பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

    இதுவரை, டெல்லி மேல் சபையில் தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவராக கனிமொழி செயல்பட்டார். தமிழக பிரச்சினைகளுக்கு அழுத்தமாக குரல் கொடுத்தார். இன்று நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தில் பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவராக கனிமொழி தேர்ந்து எடுக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.



    ஆனால் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு கட்சியின் மூத்த தலைவர். பாராளுமன்றத்தில் நீண்ட அனுபவம் உள்ளவர். எனவே டி.ஆர்.பாலுவுக்கு பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் பதவி வழங்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    டி.ஆர்.பாலு பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் கனிமொழிக்கு துணைத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது ஆ.ராசாவும் இந்த போட்டியில் இருக்கிறார்.
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 24-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. #DMK #DMKMeet
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இக்கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

    ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். #DMK #DMKMeet
    ×